இந்தியா

மீடூ புகார்கள் : அலுவலகங்களில் 80% ஆண்கள் உஷார்

மீடூ புகார்கள் : அலுவலகங்களில் 80% ஆண்கள் உஷார்

webteam

மீடூ இயக்கத்திற்குப் பிறகு, பணியிடங்களில் பெண்களிடம் 80 சதவிகித ஆண்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மீடூ விவகாரம் உலக அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி திரைத்துறை நடிகைகள் உட்பட பல பிரபலமான பெண்களும் தங்கள் வாழ்வில் நடந்த பாலியல் தொல்லைகளை பதிவிட்டு வருகின்றனர். கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்த மீடூ புகாரால் இந்த விவகாரம் தமிழகத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பாலிவுட் வட்டாரத்திலும் பல மீடூ புகார்கள் எழுந்தன. இதற்கிடையே மீடூ புகார்கள் சரியானவையா? அல்லது காலதாமதாமனவையா? என்ற விவாவதங்கள் எழுந்தன. 

இந்நிலையில் மீடூ இயக்கத்திற்குப் பிறகு, பணியிடங்களில் பெண்களிடம் 80 சதவிகித ஆண்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வெலாசிட்டி எம்ஆர் என்ற ஆய்வு நிறுவனம், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு நகரங்களில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்களிடம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மீடூ இயக்கத்திற்கு பிறகு, பெண் ஊழியர்களிடம் உரையாடுவதே பெருமளவு குறைந்து விட்டதாக 10ல் 8 ஆண்கள் தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. வேலையை இழக்கும் நிலை, குடும்ப கவுரவ பாதிப்பு, சமூக அழுத்தம் ஆகிய காரணங்களால் அதிக எச்சரிக்கை காப்பதாக பெரும்பாலான ஆண்கள் தெரிவித்துள்ளனர். எனினும், காலம் கடந்து மீடூவில் பெண்கள் புகார் தெரிவிப்பதை ஏற்க முடியாது என்றும் 50 சதவிகித ஆண்கள் கருத்து கூறியுள்ளனர்.