இந்தியா

நேர்மையற்ற கூட்டணி நீடிக்காது - அமித் ஷா

நேர்மையற்ற கூட்டணி நீடிக்காது - அமித் ஷா

webteam

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் அமைத்துள்ள கூட்டணி நேர்மையற்றது எனவும், அது நீடிக்காது என்றும் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வராக குமாரசாமி, வரும் திங்கள் கிழமை பதவியேற்க உள்ள நிலையில், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் மேற்கொள்ளப்பட உள்ள அதிகாரப்பகிர்வு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். கர்நாடக நிலவரங்களை நேரில் மேற்பார்வையிட்ட மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அசோக் கெலோட் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் அதிகார பகிர்வு குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். துணை முதல்வர் பதவி, காங்கிரசுக்கு எத்தனை அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. 

இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் அமைத்துள்ள கூட்டணி நேர்மையற்றது எனவும், அது நீடிக்காது என்றும் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா குதிரை பேரம் நடத்தியதாக வெளியான தகவல்களையும் அவர் முற்றிலும் மறுத்தார். 2014 மக்களவை தேர்தலில் வென்ற தொகுதிகளை விட அதிக தொகுதிகளை வரும் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் தங்கள் கட்சி கைப்பற்றும் என்றும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.