இந்தியா

டெங்கு சிகிச்சைக்கு ரூ.18 லட்சம்: விவரம் கேட்டார் மத்திய அமைச்சர்

டெங்கு சிகிச்சைக்கு ரூ.18 லட்சம்: விவரம் கேட்டார் மத்திய அமைச்சர்

webteam

டெங்கு காய்ச்சலுக்கு தரப்பட்ட சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்று 18 லட்ச ரூபாய் கட்டணம் வசூலித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லி குர்கானில், டெங்குவால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை நிர்வாகம், 15 நாள் சிகிச்சைக்கு 18 லட்ச ரூபாய் கட்டணம் வசூலித்திருக்கிறது என்றும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துவிட்டார் என்றும் டிவிட்டரில் பதிவிடப்பட்டிருந்த தகவல் இணையத்தில் வைரலானது. இதையறிந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, அதே ட்விட்டர் பக்கத்தில் தனது அலுவல் ஈமெயில் முகவரியை குறிப்பிட்டு, மாணவி தொடர்பாகவும், சிகிச்சை தொடர்பாகவும் தகவல்களை அனுப்புமாறும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த புகார் தொடர்பாக விளக்கமளித்த மருத்துவமனை நிர்வாகம், சிறுமிக்கு தரப்பட்ட சிகிச்சைகள் அனைத்துக்கும் முறையான ரசீதுகள் இருப்பதாகவும், மருத்துவமனையின் அறிவுரையை மீறி சிறுமியை அழைத்துச் சென்றதாலேயே அவர் உயிரிழந்தார் என்றும் கூறியுள்ளது.