கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன இந்திய ராணுவ வீரரின் உடல் புதைந்த நிலையில் ஜம்மு - காஷ்மீர் எல்லையில் மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக ஜம்மு காஷ்மீர் எல்லையில் பணி புரிந்து வந்தார் 36 வயதான ராஜேந்திர சிங் நேகி. இவர் குல்மார்க் எனும் இடத்தில் கடந்த ஜனவரி மாதம் பணியில் இருந்தபோது கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனையடுத்து ராஜேந்திர சிங் நேகி காணாமல்போனார். ராணுவத்தினர் மற்றும் போலீஸாருடன் இணைந்து அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
ஆனாலும் ராஜேந்திர குமார் நேகியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் வீர மரணம் அடைந்துவிட்டதாக கடந்த ஜூன் மாதமே ராணுவம் அறிவித்தது. இந்நிலையில் பணியில் புதைந்த நிலையில் ராஜேந்திர குமார் நேகியின் உடல் காஷ்மீர் எல்லைப் பகுதியில் கண்டெுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரின் உடலை குடும்பத்தினரிடம் ராணுவம் ஒப்படைத்துளளது.