delhi rain
delhi rain ani
இந்தியா

வட இந்தியாவில் தொடர் கனமழை; நாடு முழுவதும் 81% அதிகமான மழைப்பொழிவு! காரணம் என்ன?

Angeshwar G

டெல்லி ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இடைவிடாது பெய்த பலத்த மழையால் டெல்லியின் பல்வேறு சாலைகள் மழைநீரில் மூழ்கயுள்ளன.

கிரேட்டர் கைலாஷ், லோதி எஸ்டேட் போன்ற பகுதிகளில் நேற்று கனமழை பெய்ததால் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. குடியிருப்புகளையும் மழை நீர் சூழ்ந்து கொண்டதால் மக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

கனமழையால் டெல்லி சுற்று சுவரின் மார்க்கெட் இடிந்து விழுந்தது. ரோஹினி பகுதியில் சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஹரியானா மாநிலம் குருகிராமில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு டெல்லி மனேசர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் நெடுநேரம் நின்று செல்லும் சூழல் ஏற்பட்டது.

delhi ani

டெல்லியில் நேற்று 40 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னதாக 1982 ஆம் ஆண்டு ஜூலையில் ஒரே நாளில் 153 மிமீ மழை பதிவான நிலையில் அதே அளவில் நேற்று பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி நாடுமுழுவதும் நேற்று இயல்பை விட 81% மழை அதிகம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பெய்த கனமழையால் உதம்பூரில் உள்ள பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

அதேபோல் குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கடியதோரா பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் ராம்கார் பகுதியில் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. இதனால் பயணிகள் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர்.

இந்த கனமழைக்கு காரணம் என்ன என்பதை, இங்கே அறியலாம்: