Model Image Google Gemeni
இந்தியா

2022 டூ 2026 தேர்தல்கள்| வெற்றிக்குப் பிறகு கட்சி மாறிய 111 உறுப்பினர்கள்.. முதலிடத்தில் நாகாலாந்து!

மொத்தத்தில் 111 பேர் கட்சி மாறியுள்ளதாக அது தெரிவித்திருக்கும் நிலையில், அதில் மக்களவை உறுப்பினர்கள் 26 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 7 பேரும் அடக்கம்.

Prakash J

2022 முதல் 2026 வரையிலான தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி மாறியுள்ளதாக ADR மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்புக் குழு கண்டறிந்துள்ளது. இதில் நாகாலாந்து மற்றும் மேற்கு வங்கத்தில் அதிக எண்ணிக்கையில் கட்சி மாறியவர்கள் பதிவாகியுள்ளனர்.

2022 முதல் தற்போது வரை பொதுத் தேர்தல், சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் என நடைபெற்றுள்ளன. குறிப்பாக, 2022ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர். இமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 2023ஆம் ஆண்டு திரிபுரா, மேகலாயா, நாகாலாந்து. கர்நாடகா, மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுடன், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம், ஜம்மு-காஷ்மீர் (10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது), ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது.

Election

கடந்த ஆண்டு டெல்லி மற்றும் பீகாரில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நடப்பாண்டில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில்தான், இத்தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி மாறியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது. மொத்தத்தில் 111 பேர் கட்சி மாறியுள்ளதாக அது தெரிவித்திருக்கும் நிலையில், அதில் மக்களவை உறுப்பினர்கள் 26 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 7 பேரும் அடக்கம். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் 78 பேரும் கட்சி மாறியுள்ளனர். இந்தப் பட்டியலில் நாகாலந்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். அம்மாநிலத்தில் மொத்தம் 32 பேர் கட்சி மாறியுள்ளனர். இங்கு அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களே கட்சி மாறியுள்ளனர்.

Model Image

இதற்கடுத்து மேற்கு வங்கத்தில் 20 பேரும், தெலங்கானாவில் 9 பேரும், கோவா (8 எம்.எல்.ஏக்கள்) மற்றும் பஞ்சாப்பில் (எம்பி 6 + எம்.எல்.ஏ. 2) தலா 8 பேரும், மகாராஷ்டிரா (எம்பிக்கள் 6) மற்றும் மேகலாயாவில் (எம்.எல்.ஏக்கள் -6) தலா 6 பேரும் உள்ளனர். நாகாலாந்தைப் பொறுத்தவரை NDPP கட்சியிலிருந்து 25 பேர் மாறியுள்ளனர். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸிலிருந்து 20 பேர் வெளியேறி உள்ளனர். இவர்கள் அனைவரும் எம்பிக்களாக உள்ளனர். மேலும், காங்கிரஸிலிருந்து 19 பேரும், பாரத் ராஷ்டிர சமிதியிலிருந்து 9 பேரும், ஆம் ஆத்மி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்தும் தலா 7 பேர் கட்சி மாறியுள்ளனர். இந்தக் கட்சிகளிலிருந்து விலகியவர்களில் நாகா மக்கள் முன்னணியில் இணைந்தவர்களில் 32 பேர் உள்ளனர். அடுத்து பாஜகவில் 29 பேர் உள்ளனர். நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியாவில் 20 பேரும், காங்கிரஸில் 9 பேரும் உள்ளனர்.