இந்தியா

மக்களவை தேர்தல் : அதிமுகவில் இன்று நேர்காணல்

மக்களவை தேர்தல் : அதிமுகவில் இன்று நேர்காணல்

webteam

அதிமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்தப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதி, பாஜகவுக்கு 5 தொகுதி மற்றும் தேமுதிகவுக்கு 4 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்றும் நாளையும் நேர்காணல் நடைபெற உள்ளது. இன்றைய தினம் 20 தொகுதிகளுக்கும், நாளைய தினம் 19 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியாகாத நிலையில் 39 தொகுதிகளுக்கும் அதிமுக நேர்காணல் நடத்துகிறது.

இன்று காலை 9.30 மணிக்கு சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, விழுப்புரம் ஆகிய தொகுதிகளுக்கும் பிற்பகல் 3 மணிக்கு தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துகுடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, ஆகிய தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற உள்ளது.

நாளை காலை 10 மணிக்கு திருவள்ளூர், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய தொகுதிகளுக்கும் நாளை மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற உள்ளது.