குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அதிமுக ஆதரிக்கும் என்று மாநிலங்களவையில் பேசிய அக்கட்சியின் எம்பி எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
மக்களவையை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.
விவாதத்தின் போது பேசிய அதிமுக மாநிலங்களவை எம்பி எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம், “குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அதிமுக ஆதரிக்கும்” என்று கூறினார். அதேபோல், இலங்கையிலிருந்து அகதிகளாக வந்துள்ள தமிழர்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.