நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத் தொடரின் போது இரு அவைகளிலும் 19 அமர்வுகள் நடைபெற்றன. மக்களவையில் வங்கி திருத்த மசோதா உள்ளிட்ட 14 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 19 அமர்வுகளின் போது மக்களவையில் 29.58 மணி நேரமும், மாநிலங்களவையில் 25 மணி நேரமும் வீணடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரின் போது அவை நடவடிக்கையை குலைக்கும் வகையில் செயல்பட்டதாக ஆறு காங்கிரஸ் மக்களவை எம்பிக்கள் 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல்கள் நடைபெற்றன. பசுபாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் கொலைகள், விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றன. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் மக்களவையில் சிறப்பு விவாதமும் நடைபெற்றது.