இந்தியா

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா - ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ! 

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா - ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ! 

webteam

ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது வரவேற்க தக்கது என காங்கிரஸ் எம்.எல்.ஏ அதீதி சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். 

370 பிரிவின் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

இதனையடுத்து, ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான மறுசீரமைப்பு மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இன்று மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது வரவேற்க தக்கது என ரேபேரலி காங்கிரஸ் எம்.எல்.ஏ அதீதி சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். 

மேலும்,  “மத்திய அரசின் இந்த முடிவுக்கு நான் முழுமையாக ஆதரவு தருகிறேன். இது ஜம்மு- காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைக்க உதவும். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு. அதை அரசியலாக்கக்கூடாது. ஒரு எம்.எல்.ஏ என்ற முறையில் இதை வரவேற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.