இந்தியா

லக்னோ ஏர்போர்ட்டை 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது அதானி குழுமம்!

Veeramani

இந்திய விமான நிலைய ஆணையம், லக்னோ விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு ஒப்படைத்துள்ளது. இது "லக்னோ விமான நிலையத்திற்கு ஒரு புதிய விடியல்" என்று ஏஏஐ கூறியுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம் என அழைக்கப்படும் லக்னோ விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு ஒப்படைத்தது. "லக்னோ விமான நிலையத்திற்கு ஒரு புதிய விடியல்" என்று ஏஏஐ இன்று ட்வீட் செய்தது.

லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூர், திருவனந்தபுரம் மற்றும் குவஹாத்தி ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களை அரசாங்கம் ஏற்கனவே தனியார்மயமாக்கியது, அதானி எண்டர்பிரைசஸ் இந்த அனைத்து விமான நிலையங்களையும் இயக்கும் உரிமையை பெற்றுள்ளது.