இந்தியா

சிவசேனாவில் நடிகை ஊர்மிளா - கட்சியில் இணையும் முன்பே மேலவை உறுப்பினர் பதவி ரெடி

jagadeesh

பிரபல நடிகை ஊர்மிளா மடோன்கர் சிவசேனா கட்சியில் நாளை இணைய உள்ளார்.

கடந்தாண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிட்ட ஊர்மிளா பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் சிவசேனாவில் இணையும் அவருக்கு அக்கட்சி சட்டமேலவை உறுப்பினர் வாய்ப்பை வழங்கியுள்ளது அக்கட்சி. ஆளுநர் ஒதுக்கீட்டில் ஊர்மிளா உள்ளிட்ட 12 பேரை சட்ட மேலவை உறுப்பினர்களாக நியமிக்க சிவசேனா கட்சி பரிந்துரைத்துள்ளது.

இதற்கு ஆளுநர் கோஷியாரி ஓப்புதலை வழங்கியுள்ளார். ஊர்மிளா கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மும்பையின் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக, அக்கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இந்தியில் ரங்கீலா, தமிழில் இந்தியன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஊர்மிளா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது