இந்தியா

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் நிரபராதி

Veeramani

போதைப்பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் நிரபராதி என குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் வழக்கில் தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் ஆரியன்கான் நிரபராதி என தேசிய போதைப்பொருள் அமைப்பு கூறியுள்ளது.



முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதி கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி, போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். ஆர்யன் கானிடம் இருந்து போதை பொருள் கைப்பற்றப்படவில்லை என்றாலும் போதை மருந்து கடத்தும் கும்பலிடம் அவருக்கு தொடர்பிருப்பது வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றம் மூலம் தெரிய வந்ததாக போதை மருந்து தடுப்பு பிரிவினர் கூறினர்.

22 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஆர்யன் கானுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை போதை பொருள் தடுப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் ஆர்யன்கான் நிரபராதி என குறிப்பிடப்பட்டுள்ளது.