தன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அப்பட்டமான பொய் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாகச் சாடியுள்ளார். பிரகாஷ் ராஜ் நான்கு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில், பெங்களூரு நடுவர் நீதிமன்றம் பிரகாஷ் ராஜுக்கு பிடிவாரணட் பிறப்பித்துள்ளதாக தகவல் பரவியது.
இதை மறுத்துள்ள பிரகாஷ் ராஜ் தங்களை விற்றுவிட்ட நபர்கள் இதுபோன்ற பொய்ச் செய்திகளை பரப்புவதாக தனது எக்ஸ் பதிவில் சாடியுள்ளார். இதுகுறித்த செய்தியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.