இந்தியா

நடிகை தனுஸ்ரீக்கு நானா படேகர் நோட்டீஸ்

நடிகை தனுஸ்ரீக்கு நானா படேகர் நோட்டீஸ்

rajakannan

2005ஆம் ஆண்டு வெளியான ‘ஆசிக் பனாயா ஆப்னே’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. பல்வேறு திரைப்படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து பிரபலமான இவர், தமிழில் நடிகர் விஷாலுடன் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகர் நானா படேகர் மீது அவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் "ஹார்ன் ஒகே ப்ளீஸ்" என்ற திரைப்பட படப்பிடிப்பின்போது, நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, தாக்குதலில் ஈடுபட்டார் என தனுஸ்ரீ கூறினார். 

இதனையடுத்து தனுஸ்ரீ குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த நடிகர் நானா படேகர், அவர் மீது வழக்குத் தொடரப்படும் என்றார். இதற்கிடையில், நானா படேகர் ஏன் இன்னும் வழக்குத் தொடரவில்லை என்று சமீபத்தில் தனுஸ்ரீ கூறியிருந்தார்.

இந்நிலையில், தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா மீது வழக்குத் தொடர நடிகர் நானா படேகர்‌ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நானா படேகரின் வழக்கறிஞர் ராஜேந்திர ஷிரோகர் அனுப்பியுள்ள நோட்டீசில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு தனுஸ்ரீ தத்தா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, செவ்வாய்க்கிழமை நானா படேகர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.