துபாயில் இருந்து பாரத் திட்டத்தின் கீழ் கேரளா கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்திற்குள்ளானது. விமானத்தில் 2 விமானிகள், 10 கைக்குழந்தைகள், 6 பணியாளர்கள், 184 பயணிகள் உட்பட 191 பேர் இருந்ததாக தெரிகிறது.
இந்த விபத்தில் விமானி உட்பட இருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தரையில் மோதிய வேகத்தில் விமானம் இரண்டாக பிளந்து சேதமடைந்தது.
விமான நிலையத்தில் தரையில் இறங்கும்போது முன் சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக விமானம் விபத்திற்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.