ரயில் பயணிகளை அதிகம் கவரும் வகையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் முற்றிலும் ஏசி வசதி செய்யப்பட்ட ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இந்த ரயிலில் 3-ம் வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி, முதல் வகுப்பு ஏசி பெட்டியுடன் 3 அடுக்கு கொண்ட ஏசி பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும். அத்துடன் தானியங்கி கதவுகளும் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் 3-ம் வகுப்பு ஏசி கட்டணத்தை விட, இந்த வகை ரயிலில் கட்டணம் குறைவாக இருக்கும். அதிக குளிரால் பயணிகள் அவதிப்படுவதை தவிர்க்கும் வகையில் ஏசியின் வெப்ப நிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸாக இருக்கும்படி வைக்கப்படவுள்ளது. இதனால் இந்த ரயிலில் பயணிப்பவர்களின் போர்வையின் தேவை இருக்காது என்றும், வெப்பத்தை சமாளிக்க வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்த முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக ராஜ்தானி, சதாப்தி, ஹம்சபார் மற்றும் தேஜாஸ் ரயில்களில் மட்டுமே அனைத்து பெட்டிகளிலும் ஏசி வசதி உள்ளது.