குஜராத்தின் அகமதாபாத்தில் யோகா குரு பாபா ராம்தேவ் ஏற்பாடு செய்திருந்த யோகா நிழ்ச்சியில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டு புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
சர்வதேச யோக தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் யோகா குரு பாபா ராம்தேவ் யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, குஜராத் முதல் அமைச்சர் விஜய் ரூபானி, முன்னாள் முதலமைச்சர் ஆனந்திபென் பட்டேல் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். பொதுமக்கள் உள்பட 3 லட்சத்திற்கும் அதிகமானோர் ஒரு இடத்தில் திரண்டு யோகா பயிற்சி மேற்கொண்டதால் இது உலக சாதனைக்கு தேர்வாகியுள்ளது. இதற்கு முன் 2015-ம் ஆண்டு டெல்லி ராஜ்பாத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த முதல் சர்வதேச யோகா தினத்தன்று ஒரே இடத்தில் 35,985 பேர் கூடி யோகா செய்ததே உலக சாதனையாக கருதப்பட்டது