இந்தியா

ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்ற 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு!

JustinDurai

கடந்த 2 நாட்களில் மகா கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஹரித்வாரில் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கும்பமேளாவில் பங்கேற்று கங்கை நதியில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கானவர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இங்கே வருபவர்கள் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டியது கட்டாயம். அதே வேளையில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. எனினும் அளவுக்கதிகமாக பக்தர்கள் குவிவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே 2 நாட்களில் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கும்பமேளா நடைபெறும் பகுதியில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.