மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நாளையே பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று பதவியேற்றார். நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவருடன் ஆறு பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் தலைமையில், முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. வரும் டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கேர சட்டப்பேரவையில் நாளையே பெரும்பான்மையை நிரூபிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பேசிய சிவசேனா தலைவர் அப்துல் சாத்தர், “நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற வாய்ப்புள்ளது.
இதையும் படிக்கலாமே : "காணாமல்போன பெண் டாக்டர் எரிந்த நிலையில் மீட்பு"- தெலங்கானாவை உலுக்கிய கொலை
நாங்கள் தயாராக உள்ளோம். ஏற்கனவே எங்களிடம் 162 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். தற்போது, 170 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். இந்த அரசுக்கு மெஜாரிட்டி உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை” என்று கூறினார்.