இந்தியா

அப்துல் கரீம் தெல்கி கவலைக்கிடம்

அப்துல் கரீம் தெல்கி கவலைக்கிடம்

webteam

போலி முத்திரைத் தாள் விவகாரத்தில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் அப்துல் கரீம் தெல்கி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூளைச் சவ்வு வீக்க பிரச்னையால் பாதிக்கப்பட்ட தெல்கி தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 
போலி முத்திரைத் தாள் தயாரித்து பெரிய அளவில் மோசடி செய்த குற்றச்சாட்டில் 2001ல் கைதான தெல்கிக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.