இந்தியா

அணுகுண்டு சோதனை செய்ய தயக்கம் காட்டிய அப்துல் கலாம் - சுயசரிதையில் தகவல்

webteam

கடந்த 1998ம் ஆண்டு பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்துவது தொடர்பாக அப்போது DRDO தலைவராக இருந்த அப்துல் கலாமிற்கும் அணுசக்தி ஆணையத்திற்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக தெரியவந்துள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியா அணுசக்தி பெற்ற நாடுகளில் ஒன்றாக இடம்பெற்றது. அப்போது அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்த அனில் கக்கோடர் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதியுள்ளார்.

பொக்ரானில் ஹைட்ரஜன் வெடிகுண்டை வெடிப்பது அருகில் இருக்கும் கேட்டலாய் கிராமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அப்போது டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆய்வு மேம்பாடு நிறுவனத்தின் தலைவராக இருந்த அப்துல் கலாம் தயக்கம் காட்டியதாக அனில் கக்கோடர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 

அணுகுண்டு சோதனை செய்வதால் கிராமத்திற்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும் அவ்வாறு ஏற்பட்டால் அதற்கு தாமே பொறுப்பேற்பதாகவும் கடிதம் அளித்த பின்னரே கலாம் ஒப்புதல் அளித்து, அணு ஆயுத சோதனை நடைபெற்றதாக அனில் கக்கோடர் தெரிவித்துள்ளார். 

இதன் பின்னர் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதுடன், கேட்டலாய் கிராமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்