இந்தியா

"சிவில் சர்வீஸ் விதிகளை திருத்தும் மத்திய அரசின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது" - தினகரன்

Veeramani

இந்திய ஆட்சிப்பணி தொடர்பான விதியில் திருத்தம் கொண்டுவரும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

இப்படி ஒரு முடிவெடுக்க மத்திய அரசு தீர்மானித்திருந்தால் அதனைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மாநிலங்களில் மிகப்பெரிய நிர்வாக சீர்குலைவு ஏற்படுவதுடன், மத்திய-மாநில அரசுகளின் உறவும் சிக்கலாகிவிடும். சீர்திருத்தங்கள் என்ற பெயரில் இத்தகைய குளறுபடிகள் நிகழ்த்தப்படுவது கூட்டாட்சி நடைபெறும் இந்தியா போன்ற நாட்டுக்கு உகந்ததல்ல. இதையெல்லாம் மத்திய ஆட்சியாளர்கள் சீர்தூக்கி பார்த்து செயல்பட வேண்டுகிறேன்" என தெரிவித்திருக்கிறார்