இந்தியா

மக்களவையில் ’இன்குலாப் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்ட ஆம் ஆத்மி எம்.பி!

மக்களவையில் ’இன்குலாப் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்ட ஆம் ஆத்மி எம்.பி!

webteam

மக்களவையில் பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி, இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் தொடர் என்பதால் தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதி எம்பியாக பதவியேற்றார். தொடர்ச்சியாக அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரும் மக்களவை எம்பிகளாக பதவியேற்றனர். மற்றும் ஸ்மிருதி இரானி, சதானந்த கவுடா உள்ளிட்ட அமைச்சர்களும் எம்.பி.க்களாக பதவியேற்றனர். பல்வேறு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் நேற்று பதவியேற்றனர்.

இன்றும் பல்வேறு மாநில எம்.பிக்கள் பதவியேற்று வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் சங்ரூர் தொகுதி ஆம் ஆத்மி எம்.பி, பக்வந்த் மன் இன்று பதவியேற்றார். பதவியேற்ற பின் அவர் ’இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று திடீரென முழக்கமிட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.