வொர்லி தொகுதியில் சிவசேனா கட்சியின் ஆதித்யா தாக்கரே முன்னிலை பெற்றுள்ளார்.
மகாராஷ்ட்ர சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவின் பேரனும், அவரது மகன் உத்தவ் தாக்கரே வின் மகனுமான ஆதித்யா தாக்கரே, வொர்லி தொகுதியில் போட்டியிட்டார். அவரது குடும்பத்தினர் யாரும் இதுவரை தேர்தலில் போட்டியிட்டதில்லை. கட்சி பொறுப்புகளை மட்டுமே வகித்து வந்தனர். இந்நிலையில் தாக்கரே குடும்பத்தில் இருந்து முதன்முறையாக ஆதித்ய தாக்கரே போட்டியிட்டதால் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியதுமே, ஆதித்யா தாக்கரே முன்னிலையில் இருந்தார். அவர் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ் மானே, பின் தங்கியுள்ளார்.