இந்தியா

ஆதார் பாதுகாப்பானது: ரவிஷங்கர் பிரசாத் தகவல்

webteam

ஆதாரிலுள்ள தகவல்கள் தவறாகப் பகிர முடியாத அளவுக்கு பாதுகாப்பானது என மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

ஆதார் அட்டைக்காக அளிக்கப்படும் தனிநபர் குறித்த தகவல்கள் தவறாக பன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் ஆகவே ஆதாரைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் குறித்த சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார் அளித்திருக்கிறார் மத்திய அமைச்சர். அந்தத் தகவலை தனது ட்விட்டர் பதிவிலும் பகிர்ந்திருக்கிறார்.

ஆதார் பாதுக்காப்பானது என்றும் அதில் பதியப்படும் ஆவணங்கள் சில குறியீடுகளால் சேமிக்கப்படுள்ளது என்றும் அதிலிருந்து தகவல்களை எளிதாக எடுத்து பகிர முடியாது என்றும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். அங்கீகாரமற்ற முறையில் ஆதார் விபரங்களைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு ஸ்திரத்தன்னைமை உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.