ரயில்களில் பயணிக்க 6 டிக்கெட்களுக்கு மேல் முன்பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என்று ஐஆர்சிடிசி அதிகாரி கூறியுள்ளார்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒரு நபருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு 6-ல் இருந்து 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 6 டிக்கெட்களுக்கு மேல் முன்பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று ஐஆர்சிடிசி அதிகாரி கூறினார். இந்த ரயில் டிக்கெட் எண்ணிக்கை 2017 அக்டோபர் 26 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.