வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோர் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
இதுவரை ஆதாரை இணைக்க முடியாதவர்கள் வருமான வரி இணையத்தளத்திற்குச் சென்று லிங்க் ஆதார் என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்து இரு எண்களையும் இணைக்க முடியும். இதேபோல் மொபைல் போனில் UIDPAN என டைப் செய்து அத்துடன் ஆதார், பான் எண்களை டைப் செய்து 567678 அல்லது 56161 ஆகிய எண்களுக்கு அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.