இந்தியா

பி.எஃப். பயனாளிகளுக்கு ஆதார் எண் அவசியம்

பி.எஃப். பயனாளிகளுக்கு ஆதார் எண் அவசியம்

webteam

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) கீழ் பயன்பெறும் அனைத்து பயனர்களும் தங்களது ஆதார் அடையாள எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என இபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) கீழ் பயன்பெறும் பயனர்கள் பி.எஃப் சேவைகளை பெற இந்த மாத இறுதிக்குள் ஆதார் அடையாள எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் வி.பி.சிங் கூறுகையில், நாடு முழுவதும் 50 லட்சம் ஓய்வூதியதாரர்களும், 4 கோடி சந்தாதாரர்களும் இபிஎஃப்ஓ அமைப்பின் சேவைகளைப் பெற்று வருகின்றனர்.

இபிஎஃப்ஓ அமைப்பின் சேவைகளைத் தொடர்ந்து பெற வேண்டுமெனில், வரும் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இந்த மாத இறுதிக்குப் பிறகு சூழலைப் பொறுத்து கால அவகாசம் நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆதார் எண்ணை இணைப்பது குறித்து நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று 120 மண்டல அலுவலகங்களுக்கு இபிஎஃப்ஓ அமைப்பு உத்தரவிட்டுள்ளது.