இந்தியா

‌சிறைக் கைதிகளைப் பார்க்கவும் ஆதார் வேண்டும்

‌சிறைக் கைதிகளைப் பார்க்கவும் ஆதார் வேண்டும்

webteam

கர்நாடக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைக் காண வருவோர் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா, பெலகாவி மாவட்டத்திலுள்ள இண்டல்கா, பல்லாரி, மைசூரு உள்ளிட்ட அனைத்து‌ சிறைச்சாலை கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், சிறையிலுள்ள கைதிகளை காண வருபவர்கள் தங்களின் ஆதார் எண்ணை வருகை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும் எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக ஆதார் இல்லாமல் வந்தால் அனுமதிக்கலாம் என்று‌ம், அடுத்தடுத்து அவ்வாறு வந்தால் ‌திருப்பி அனுப்பப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாநில உள்துறை அமைச்சகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு முதலாவதாக இந்த நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.