இந்தியா

'தனிமனித சுதந்திரம் சட்டத்திற்கு உட்பட்டது'... ஆதார் எண் வழக்கில் மத்திய அரசு வாதம்

'தனிமனித சுதந்திரம் சட்டத்திற்கு உட்பட்டது'... ஆதார் எண் வழக்கில் மத்திய அரசு வாதம்

webteam

தனிமனித சுதந்திரம் என்பது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதுதான் என்றும், அது முழுமையானதாக இருக்க கூடியது அல்ல என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மத்திய அரசின் அனைத்து திட்டத்திற்கும் ஆதார் முக்கியம் என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், ஆதார் கார்டு கட்டாயம் என்பது தனிமனித உரிமை என்ற அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பான வழக்கில் மத்திய அரசின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதாடுகையில், தனி நபர் சுதந்திரம் சட்டத்திற்குட்பட்டது தான். தனி மனித சுதந்திரம் என்பது முழுமையானதாக இருக்க கூடியது அல்ல என கூறினார். அரசியல் சாசனப் பிரிவு 21-ன் படி எந்த ஒரு தனி நபரும் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைக்கு உட்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதனால்தான் மரண தண்டனை, சிறை தண்டனைகளை கொண்டுவந்திருக்கிறோம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.