இந்தியா

ரயில்வே ஊழியர்களுக்கு ஆதார் அடிப்படை வருகைப் பதிவு

ரயில்வே ஊழியர்களுக்கு ஆதார் அடிப்படை வருகைப் பதிவு

webteam

ரயில்வே துறையில், ஆதார் அடிப்படையிலான வருகை பதிவு முறையை அமல்படுத்தப்பட இருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் கடந்த 3-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளது.

இதன்படி முதல்கட்டமாக, அனைத்து ரயில்வே டிவிசன் அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள், கொல்கத்தா மெட்ரோ ரயில், ரயில்வே பணிமனை, தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் வரும் 30ம் தேதி இந்த ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகை பதிவு முறை நடைமுறைக்கு வருகிறது. ஜனவரி 31ஆம் தேதிக்குள் அனைத்து ரயில்வே மண்டலம் மற்றும் அலுவலகங்களில் இந்த வருகை பதிவு முறை அமல்படுத்தப்பட இருக்கிறது. 

ரயில்வே அதிகாரிகள், சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு வருகிறார்களா அல்லது வராமல் இருக்கிறார்களா என்பதை கண்டறிய இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.