மும்பையில் பருவ மழை பெய்துவருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பல அழிவுகள் நடந்துகொண்டே உள்ளன.
பல ரயில் போக்குவரத்துகள் ரத்துசெய்யப்பட்டுள்ளது. பல போக்குவரத்து பாதைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தொடர் கனமழையால் நகரமே சீர்குலைந்து வருகிறது. நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு, மரங்கள் சாய்ந்து, வாகனங்கள் நீரில் மூழ்கி, மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகளுக்கும் வெள்ளம் பாய்ந்து ஓடும் வீடியோக்கள் வந்துகொண்டே உள்ளன.
இதில் மேற்கு மும்பையில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது. ஒரு பெண் சாலையில் நின்றுகொண்டு பாதாளச் சாக்கடை ஒன்று திறந்துள்ளதை சுட்டிக்காட்டி, வாகன ஓட்டிகளை எச்சரித்துக் கொண்டிருக்கும் வீடியோ அது. அந்த பெண் கிட்டத்தட்ட 5 மணி நேரம் அந்த தெருவில் நின்று மக்களை எச்சரித்ததாக அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர். பெய்யும் மழையில் 5 மணிநேரம் நின்ற அந்த பெண்ணின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.