அப்துல் கலாமை போற்றும் வகையில்’கலாம் கலாம் சலாம் சலாம்’ என்று வைரமுத்து வரிகளில் ஜிப்ரான் இசையில் பாடல் உருவாகி உள்ளது.
விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல்கலாம் நினைவுக்கூடம் ராமேஸ்வரத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பேய்க்கரும்பு இடத்தில் வரும் 27 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், கலாமின் நினைவைப் போற்றும் விதமாக வீடியோ பாடல் ஒன்று உருவாகி வருகிறது. இயக்குனர் வசந்த் எஸ் சாய் இயக்கும் இப்பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். இப்பாடலை இசையமைத்தவர் ஜிப்ரான். இந்த பாடல் 'கலாம் கலாம் சலாம் சலாம்.' என்று வரிகளுடன் தொடங்குகிறது. கலாம் பாடலை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.