இந்தியா

கங்கை நீரால் கோயிலை சுத்தப்படுத்திய மக்கள்: பெண் எம்எல்ஏவுக்கு நடந்த கொடுமை

webteam

பாஜக தலித் பெண் எம்எல்ஏ வந்து சென்ற பின்னர் கங்கை நதி நீரால் கோயிலை சுத்தப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹமீர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ரிஷி த்ரோம் கோயிலுக்கு ராத் தொகுதியை சேர்ந்த பாஜக தலித் பெண் எம்எல்ஏ மனிஷா அனுராகி சென்றிருந்தார். ரிஷி த்ரோம் கோயிலில் பெண்கள் வழிபடத் தடை உள்ள நிலையில், அது தெரியாமல் கட்சி தொண்டர்களின் வலியுறுத்தலின் பேரில் மனிஷா அனுராகி சென்றுள்ளார். 

இதையடுத்து மனிஷா அனுராகி வந்து சென்ற பின்னர் சுத்தம் செய்வதற்காக ரிஷி த்ரோம் கோயில் மூடப்பட்டது. கிராம மக்கள் ஒன்றிணைந்து கோயிலை கங்கை நீரால் சுத்தப்படுத்தினர். சாமி சிலைகளை கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்திலிருந்த தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.