இந்தியா

பாலியல் வன்கொடுமை: 10-ம் வகுப்பு மாணவி கொலை!

பாலியல் வன்கொடுமை: 10-ம் வகுப்பு மாணவி கொலை!

webteam

பாலியல் பலாத்காரம் செய்து 10-ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவில் உள்ள 49-வது செக்டாரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி காணாமல் போனார். அவர் கடத்தப்பட்டதாக அவரது தாய் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார், காணாமல் போன மாணவியுடன் அந்தப் பகுதியை சேர்ந்த யாஷ்வீர் என்பவன் அடிக்கடிப் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. 

போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவி காணாமல் போனதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று கூறினான். போலீசார் விட்டுப் பிடித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த மாணவியை கொன்றுவிட்டதாக அதிர்ச்சித் தகவலைச் சொன்னான் யாஷ்வீர். 
அந்த மாணவி யாஷ்வீரை காதலித்துள்ளார். இதையடுத்து அவரை யாஷ்வீர் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். தொடர்ந்து பாலியல் டார்ச்சர் செய்ததால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு, உடலை சிம்பவுலி என்ற பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளான். இதையடுத்து போலீசார் அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.