இந்தியா

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்

webteam

9ஆம் வகுப்பு மாணவன், சக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன் என மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வகுப்பில் பயிலும் சக மாணவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன் என மிரட்டுவதாகக் கூறியுள்ளார். தன்னை அந்த மாணவன் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் மாணவன் மீது நடவடிக்கையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அந்த மாணவன் பலமுறை தன்னை அடித்ததாகவும் ஒருநாள் எனது தந்தையை சந்தித்து என் மீது ஆசிட்டை வீசிவிடுவேன் என மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.