ஜம்மு-காஷ்மீரின் ஆக்னூர் எல்லைப் பகுதியில், சிந்தூர் ஆபரேஷனில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் ஏழு பெண் வீராங்கனைகள், மூன்று நாட்கள் மற்றும் மூன்று இரவுகள் தொடர்ந்து போராடி, இரண்டு முன்னணி இடங்களைப் பாதுகாப்பதில் சாதனை படைத்தனர். பாகிஸ்தானின் சியால்கோட்டில் இருந்து வந்த எதிரியின் ஏவுகனைகளை எதிர்த்து, வெற்றிகரமாகத் தங்களது நிலைகளை காப்பாற்றினர்.
இந்த ஆபரேஷனுக்கு தலைமையேற்றிருந்தவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேவையில் சேர்ந்த உதவி கமாண்டர் நெஹா பண்டாரி ஆவார். இந்திய ராணுவத்தில் பெண்கள் போர் முனைகளில் அதிகம் பங்கேற்காத சூழலில் நேரடி பங்களிப்பில் ஈடுபட்ட முதலாவது பெண் அதிகாரியாக இவர் உயர்ந்தார்.
பண்டாரியின் சிறந்த வழிகாட்டுதலில், உடன் இருந்த ஆறு பெண் வீராங்கனைகள் வீரபூர்வமாக தாக்குதல்களை எதிர்த்து சேவை புரிந்தனர். ஆறு பேரில் நான்கு பேர் கடந்த 2023ஆம் ஆண்டில் சேவையில் சேர்ந்தவர்கள். மீதமிருந்த இருவர் 17ஆண்டுகள் ராணுவத்தில் சேவை புரிந்தவர்கள். ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் தாக்குதல்களை எதிர்த்து முறியடித்த சிங்கப் பெண்கள் பற்றிய செய்தி தேசிய அளவில் இப்போது கவனம் பெற்றுள்ளது.