இந்தியா

அந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

அந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

JustinDurai
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இன்று காலை 9.10 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலையில் போர்ட் ப்ளேயரில் 4.3 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து காலை 9.15 மணி அளவில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கும் உருவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும் திடீர் நிலநடுக்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.