சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்ற விவகாரம் தொடர்பாக இந்தி சினிமா தயாரிப்பாளர் இம்தியாஸ் ஹத்ரியின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 3-ம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடந்ததைத் தொடர்ந்து, கப்பலில் அதிரடி சோதனை நடத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் போதைப்பொருளை கைப்பற்றினர். இதில், சொகுசு கப்பலில் பயணித்த ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை கைதாகி காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்ற வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மும்பையை சேர்ந்த பிரபல சினிமா தயாரிப்பாளர் இம்தியாஸ் ஹத்ரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மும்பையின் பாந்திரா பகுதியில் உள்ள இம்தியாசின் வீடு மற்றும் அலுவலகத்தில் காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.