இந்தியா

நீதிமன்ற வளாகத்தில் மோதல் : வழக்கறிஞர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

நீதிமன்ற வளாகத்தில் மோதல் : வழக்கறிஞர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

webteam

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் போலீசார் - வழக்கறிஞர்கள் இடையே  ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையே டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடும் நடந்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. 

போலீஸ் வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. போலீசார் சுட்டதில் வழக்கறிஞர் ஒருவர் காயமடைந்தார். இதைனையடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.