இந்தியா

‘தனி ஒருவன்’ - டிக்கெட் எடுக்காத பயணிகளிடம் ரூ1.5 கோடி வசூலித்த அதிகாரி

‘தனி ஒருவன்’ - டிக்கெட் எடுக்காத பயணிகளிடம் ரூ1.5 கோடி வசூலித்த அதிகாரி

webteam

மும்பையில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 22,680 பயணிகளைப் பிடித்ததில், 1.51 கோடி ரூபாய் அவர்களிடமிருந்து அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதனையாளராக பணியாற்றி வருபவர் எஸ்.பி. கலண்டே. இவர் மத்திய ரயிலே துறையில் பறக்கும் படை அதிகாரி பொறுப்பில் உள்ளார். இவர் தனி ஆளாக மட்டுமே ரயில்வே துறைக்கு அதிகமான வருமானத்தை ஈட்டித் தந்துள்ளார். மேலும் மூன்று ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் கடந்த 2019 ஆண்டில் மட்டும் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டித் தந்துள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எம் எம் ஷிண்டே, டி குமார் மற்றும் தலைமை டிக்கெட் பரிசோதகர் ரவிக்குமார் ஜி ஆகியோர்தான் அந்த அதிகார்கள். இவர்கள் மும்பை ரயில்வே கோட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.

தொலைத்தூர ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து கலாண்டே, ஷிண்டே மற்றும் டி குமார் ஆகியோர் அபராதத்தை நீண்ட காலமாக சேகரித்து வந்தனர். ரவிக்குமார் என்ற பரிசோதகர் மும்பை புறநகர் நகர பயணிகளிடமிருந்தும் தொகையை வசூலித்துள்ளார்.

இவர்களில் ஷிண்டே மட்டும் 16035 மட்டும் டிக்கெட் எடுக்காத பயணிகளிடம் இருந்து 1.07 கோடி ரூபாய் வசூலித்துள்ளார். குமார் என்ற அதிகாரி 15234 டிக்கெட் இல்லாத பயணிகளிடமிருந்து 1.02 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளார். ரவிகுமார் என்ற பரிசோதகர் மட்டும் 1.45 கோடி ரூபாய் வசூல் செய்து ரயில்வே துறைக்கு மிகப் பெரிய வருவாயை ஈட்டியுள்ளார். இந்தத் தொகை டிக்கெட் எடுக்காமல் பயணித்த் 20657 பயணிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்டுள்ளது.

“இவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி பொது மேலாளர் பாராட்டி உள்ளார்” என மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் கூறினார்.