இந்தியா

‘எமதர்ம ராஜா’ வேடம்மிட்டு கொரோனா தடுப்பு மருந்து போட்டுக்கொண்ட காவலர்!

‘எமதர்ம ராஜா’ வேடம்மிட்டு கொரோனா தடுப்பு மருந்து போட்டுக்கொண்ட காவலர்!

EllusamyKarthik

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘எமதர்ம ராஜா’ வேடம்மிட்டு வந்து கொரோனா தடுப்பு மருந்து போட்டுக்கொண்ட காவலர்!

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த காவலர் ஜவஹர் சிங் ‘எமதர்ம ராஜா’ வேடத்தில் மருத்துவமனைக்கு வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மரணத்தின் கடவுள் என சொல்லப்படுகின்ற எமதர்மனின் வேடத்தில் வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். 

“ஒவ்வொரு முன்கள பணியாளரும் கொரோனா தடுப்பூசியை நிச்சயம் செலுத்திக் கொள்ள வேண்டுமென்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதை செய்துள்ளேன்” என அவர் சொல்லியுள்ளார். 

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்றினால் பொதுமுடக்கம் அறிவித்த போது அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு சாலைகளில் செல்பவர்களிடம் ‘எமதர்ம ராஜா’ வேடத்தில் ஜவஹர் வந்திருந்தும் குறிப்பிடத்தக்கது. அந்த  காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.