பல மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ள நிலையில், மத்திய அரசு தேசிய அளவில் டெல்லியில் கண்காணிப்பு மையம் அமைத்துள்ளது.
ஹிமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இந்த பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் மாநிலங்களுக்கு அவ்வபோது அறிவுறுத்தல்களை வழங்குவது தொடர்பாகவும் மத்திய அரசு டெல்லியில் கண்காணிப்பு மையம் ஒன்றை அமைத்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கீழ் செயல்படும் அதிகாரிகளை கொண்டு இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. பறவைகளின் இறப்பு விவரங்கள் குறித்த அறிக்கையை மாநில அரசுகள் வாரம் ஒரு முறை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.