இந்தியா

பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயன்றவருக்கு கிராம மக்கள் கொடுத்த நூதன தண்டனை

பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயன்றவருக்கு கிராம மக்கள் கொடுத்த நூதன தண்டனை

webteam

கர்நாடகா மாநிலத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபருக்கு கிராம மக்கள் நூதன முறையில் தண்டனை அளித்தனர். 

விஜய‌புரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை‌, ஆண் ஒருவர் பா‌லியல் வன்புணர்‌ச்சி செய்ய முயன்றுள்ளார். இத‌னை அறிந்த அப்பெண்ணின் உறவினர்கள், கிராம மக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்த‌னர். மேலும், ‌அவருக்கு பாதி மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து, பெண் உடையுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்து‌றையினர் அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் அந்த நபர் மது போதையில் இவ்வாறு நடந்துகொண்டார் என தெரியவந்துள்ளது.