உலகில் ஒவ்வொரு 5 விநாடிக்கும் ஒரு குழந்தை மரணமடைவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டில் தண்ணீர், சுகாதாரக்கேடு, ஊட்டச்சத்து ஆகிய குறைபாடுகளால் 15 வயதுக்கு குறைவான 60 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துள்ளதாக தெரிகிறது. தரமான மருந்துகள், சுத்தமான குடிநீர், தடுப்பூசி போன்ற அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்திக் கொடுத்தால் குழந்தைகளின் மரண எண்ணிக்கையை குறைக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் 2030 ஆம் ஆண்டிற்குள் 5 கோடியே 60 லட்சம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்றும் ஐநா எச்சரித்துள்ளது.