இந்தியா

பிரதமர் மோடி குறித்து ஆய்வு : இளைஞருக்கு டாக்டர் பட்டம்

webteam

சூரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். 

சமூக சேவை, ஒரு துறையில் சிறந்த ஆராய்ச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக டாக்டர் பட்டங்கள் வழங்கப்படும். அந்த வகையில் மெஹூல் சோக்ஸி என்ற அரசியல் அறிவியல் பாடப்பிரிவு பட்டதாரி, ஒரு ஆய்வை தொடங்கினார். அவர் ஆய்வு செய்தது, தற்போது இந்தியப் பிரதமராக உள்ள நரேந்திர மோடியைதான். மோடி முதலமைச்சராக இருந்த காலம் தொடர்பாகவும், அவரது பொதுப்பணிகள் தொடர்பாகவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அரசை ஆளும் தலைவர் நரேந்திர மோடி என்ற தலைப்பில் அந்த இளைஞர் ஆய்வை நடத்தினார். இதற்காக 450 அரசு அலுவலர்கள், விவசாயிகள், மாணவர்கள், கட்சித் தலைவர்களிடம் புள்ளிவிவரங்களை சேகரித்தார். குஜராத் மாநில‌ முதல்வராக மோடி இருந்தபோது அவரின் ஆளுமை திறமையையும், பிரதமர் பதவியில் அவர் வகுத்துள்ள திட்டங்களை ஆராய்ந்தார். மேலும் அத‌‌னால் கிடைத்த‌ நன்மைகள் குறித்து மெஹுல் சோக்ஸி ‌ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்தார். குஜராத்தின் வீர‌ நர்மதா பல்கலைக்கழகத்தில் ‌சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆய்வுக்காக, அந்த இளைஞருக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.