இந்தியா

ஆசியாவில் முதல்முறை! 187 வகை டார்க் சாக்லேட்டை தயாரித்து உதகை நிறுவனம் சாதனை!

webteam

ஆசிய அளவில் முதல் முறையாக 187 (Dark) வகையான டார்க் சாக்லேட்டுகளை தயாரித்து அசத்திய உதகை ஹோம்மேடு சாக்லேட் தனியார் நிறுவனம், இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலைத் தோட்ட காய்கறி விவசாயத்திற்கு அடுத்த படியாக சுற்றுலா பயணிகளிடம் ஹோம்மேடு சாக்லேட்டுகளுக்கு தனி வர வேற்ப்பு உள்ளது. குறிப்பாக உதகையில் தயாரிக்கப்படும் ஹோம்மேடு சாக்லேட்டுகளை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் உதகையில் கடந்த 2000ம் ஆண்டு முதல் ஹோம் மேடு சாக்லேட்டுகள் தயாரிக்கும் தனியார் நிறுவனம், முதல் முறையாக தற்போது 187 வகையான டார்க் (Dark) ஹோம்மேடு சாக்லேட்டுகளை தயாரித்து சாதனைப்படுத்தியுள்ளது.

குறிப்பாக டார்க் பிஸ்தா, வால்நட், ரெட் பிளம், ரோஸ்மேரி, ஜின்ஜர், சைபரல் நா, லெமன் கிராஸ், ஆரஞ்சு பிக்கோட்டி உள்ளிட்ட 200 க்கும் மேற்ப்பட்ட டார்க் (Darck) சாக்லேட்டுகள் தயாரித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இங்கு தயாரிக்கப்பட்டுள்ள ஹோம்மேடு சாக்லேட்டுகள் 50 ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 187 வகையான டார்க் (Dark) சாக்லேட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதற்கான சான்றிதழை, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு பொறுப்பாளர் விவேக் வழங்கினார்.