இந்தியா

’போலீஸ் காவலில் வைக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி’ முதல்வருக்கு எதிராகவே பேசியதன் எதிரொலியா?

’போலீஸ் காவலில் வைக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி’ முதல்வருக்கு எதிராகவே பேசியதன் எதிரொலியா?

EllusamyKarthik

மணிப்பூர் மாநில போதைப்பொருள் தடுப்பு காவல் பிரிவின் முதுநிலை அதிகாரியாக பணியாற்றி வருபவர் தனுஜம் பிருந்தா. 

அண்மையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஒருவரை விடுவிக்குமாறு தனக்கு மணிப்பூர் மாநில முதல்வர் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டை வைத்தவர். அது தொடர்பாக நீதிமன்றத்திலேயே பிராமண பத்திரமாக தாக்கல் செய்திருந்தார். 

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி கடந்த திங்கள் இரவு வெளியில் நடமாடியதற்காக தனுஜம் பிருந்தா மற்றும் அவரோடு இருந்த இரண்டு பேரை இம்பால் நகர மேற்கு காவல் நிலைய அதிகாரிகள் போலீஸ் காவலில் வைத்துள்ளனர். 

இந்நிலையில் இம்பால் போலீஸ் ஐ.ஜி ஜெயந்தா பத்திரிகையாளர்களிடத்தில் தெரிவித்துள்ளது “எந்தவொரு உள்நோக்கமும் இன்றி தனுஜம் பிருந்தா மீது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்” என தெரிவித்திருந்தார். 

“நள்ளிரவு 12.40 மணிக்கு என்னை அவர்கள் போலீஸ் காவலில் வைத்தனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக அபராத தொகையை செலுத்த எனது கணவர் தயாராக இருந்த போதும் அதை அவர்கள் மறுத்து விட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு எங்களை வெளியில் செல்ல அனுமதித்தனர். அதை வைத்து பார்க்கும் போது உள்நோக்கத்தோடு என்னை போலீஸ் காவலில் வைத்ததாகவே நான் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார் தனுஜம்.