மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மூலம், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் சுழற்சி முறையில் பெண்களுக்கான தொகுதிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்காக அவை ஒதுக்கீடு செய்யப்படும். அதாவது, மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் டெல்லி சட்டமன்றம் ஆகியவற்றில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று இந்த மசோதா கூறுகிறது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதிகள் மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச தொகுதி மறுவரையறை மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா என்றால் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்..
மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மூலம், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் சுழற்சி முறையில் பெண்களுக்கான தொகுதிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்காக அவை ஒதுக்கீடு செய்யப்படும். அதாவது, மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் டெல்லி சட்டமன்றம் ஆகியவற்றில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று இந்த மசோதா கூறுகிறது. கிராம பஞ்சாயத்துகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கீடுசெய்யப்பட வேண்டும் என்று 1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரு சட்ட திருத்தத்தின் வாயிலாக தான் இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற யோசனை முதன் முதலாக முன்வைக்கப்பட்டது. இந்த மசோதா (128-வது அரசியலமைப்பு திருத்த மசோதா), செப்டம்பர் 2023-இல் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. நீண்டகால போராட்டத்திற்குப் பிறகு, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் இது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுச் சட்டமாகியுள்ளது. இது நடைமுறைக்கு வருவதற்கு மேலும் சில சட்டத் திருத்தங்கள் (131-வது திருத்த மசோதா போன்றவை) தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன. பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவின் மூலம் தற்போது இருக்கும் 543 மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோன்ற இட அதிகரிப்பு அந்தந்த மாநிலச் சட்டமன்றங்களிலும் விகிதாசார அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மக்களவையின் உயர்த்தப்பட்ட 816 இடங்களில் 273 இடங்கள் (33%) பெண்களுக்கு ஒதுக்கப்படும். பெண்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் ஒவ்வொரு தொகுதி மறுவரையறைக்கு பிறகும் சுழற்சி முறையில் மாற்றப்படும். அதாவது, பெண்களுக்கு ஒதுக்கப்படும் 33% இடங்கள் ஒரே தொகுதியில் நிலையாக இருக்காது. ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் அல்லது தொகுதி மறுவரையறைக்குப் பிறகும், குலுக்கல் முறையில் (Lottery system) தொகுதிகள் மாற்றப்படும். இதன்மூலம் அனைத்து தொகுதிகளிலும் பெண்கள் போட்டியிட வாய்ப்பு உருவாக்கப்படும். எனினும், இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வர புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
2021-இல் நடக்க வேண்டிய கணக்கெடுப்பு தள்ளிப்போனதால், தற்போது 2026-ஆம் ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. சமீபத்திய தகவல்களின்படி, பணிகளை விரைவுபடுத்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளையே அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தவும் ஆலோசனைகள் நடந்துவருகின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்தவுடன், தொகுதி மறுவரையறை ஆணையம் (Delimitation Commission) அமைக்கப்பட்டு, மாநிலங்களின் மக்கள்தொகை மாற்றத்திற்கு ஏற்ப, மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கப்படும். பின்னர், அதில் எந்தெந்த தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும்.அநேகமாக 2029 மக்களவைத் தேர்தலில் இது நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.